×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த வீரத்தமிழன் நடராஜன்.! மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர்.!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று  நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற அளவில் வென்றது.

இந்த போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன் தனது முதல் சர்வதேச போட்டியிலேயே முக்கியமான  இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார். நடராஜனுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#natarajan #edapadi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story