தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்..! வைரலாகும் புகைப்படங்கள்..!
tamil girl encaged with australia player

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த வினி இராமன் என்பவரை காதலித்து திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
வினி ராமன் மெல்போர்னில் வசித்துவருகிறார். ஆனால் அவரது பூர்வீகம் தமிழகம் என கூறப்படுகிறது. மேலும் இவர் மருத்துவம் படித்து வருகிறார்.. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் 2017 ஆம் ஆண்டு முதல் வினி ராமனை காதலித்து வந்துள்ளார். மேலும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் தற்போது பிப்ரவரி 26 அன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தாங்கள் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படத்தை வின் இராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணிக்கு ஏலம் எடுக்கபட்டுள்ள நிலையில் ஐபிஎல் தொடருக்கு பிறகு திருமணம் இருக்கலாம் என கூறப்படுகிறது.