சுரேஷ் ரெய்னாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? சோகத்தில் ரசிகர்கள்! BCCI ட்விட்!
Suresh raina in hospital for knee surgery

இந்திய அணியில் அதிரடி வீரர்களில் ஒருவராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். புது வீரர்களின் வருகை மேலும் கடந்த சில வருடங்களாக சரியான பார்மில் இல்லாததால் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார் சுரேஷ் ரெய்னா.
தற்போது உள்ளூர் விளையாட்டு போட்டிகள், சென்னை அணிக்கான ஐபில் ஆட்டம் போன்றவற்றில் மட்டுமே விளையாடிவரும் சுரேஷ் ரெய்னா கடந்த சில மாதங்களா முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவஸ்தை பட்டு வந்துள்ளார்.
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா தற்போது அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாகவும், அவரது முழங்காலில் ஏற்பட்ட பிரச்சனை சரியாகிவிட்டதாகவும், ஒருசில வாரங்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.