×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தோனி இருக்கும் வரை எனக்கு எந்த கவலையும் இல்லை.. சிஎஸ்கே உரிமையாளர் நம்பிக்கை!

Srinivasan hopes dhoni for ipl2020

Advertisement

ஐபிஎல் 2020 டி20 தொடர் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி யூஏஇயில் துவங்கவுள்ளது. இதற்காக வீரர்கள் அனைவரும் யூஏஇக்கு தகுந்த பாதுகாப்புடன் சென்றுள்ளனர்.

6 நாள் குவாரன்டைன் காலத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் 2 வீரர்களும் அடங்குவர். மேலும் சுரேஷ் ரெய்னாவும் ஐபிஎல் தொடரை விட்டு விலகியதால் சென்னை அணி மேல் இருந்த நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் குறைய துவங்கியது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை குறித்து உரிமையாளர் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "எத்தகைய சூழ்நிலையையும் தாங்க கூடிய உறுதியான கேப்டன் எங்கள் அணியில் உள்ளார். தோனியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

நான் தோனியிடம் பேசும்பொழுது அவர் ஏற்கனவே அணி வீரர்களுடன் சூம் காலில் பேசி அனைவரையும் பாதுகாப்புடன் இருக்கும்படி கூறியுள்ளார். தோனியின் மிகச்சிறந்த ஆளுமை எந்த சூழலிலும் ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்" என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Csk chairman #dhoni #Srinivasan #IPL2020
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story