×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இலங்கை அணிக்கு கிடைத்த மீண்டும் ஒரு மலிங்கா! கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை! வைரல் வீடியோ!

srilanka team second malinga

Advertisement

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து பந்து வீச்சாளர் லஸித் மலிங்கா. 35 வயதான மலிங்கா சிறப்பான பந்து வீச்சால் எதிரணியை திணறடிக்க கூடியவர். மலிங்கா 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரோடு மலிங்கா சர்வதேச ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மலிங்கா ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். 

யார்க்கர் பந்துவீச்சில் மலிங்காவிற்கு இணையாக யாருமில்லை என்று பேசப்பட்டவர் இவர், யார்க்கர் மன்னன் என்றழைக்கப்பட்டார். இந்தநிலையில் இலங்கை அணியில் அவர் போன்று பந்து வீச்சாளர் யார் கிடைப்பார் என்ற கேள்வி எழுந்து வந்தது.

இந்நிலையில் மலிங்காவைப் போன்றே பந்து வீசும் நுவன் துஷராவின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 24 வயதாகும் இவர் ஐந்து முதல் தர போட்டியிலும், 14 டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பெரும்பாலானோர் நான் மலிங்காவை போன்றே பந்து வீச முயற்சிப்பதாக கூறுகின்றனர். ஆனால் இது எனக்கு இயற்கையாகவே வீச வருகிறது என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#malinga #srilanka cricket
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story