×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடரை சமன் செய்வாரா விராட் கோஹ்லி; நிதானமாக ஆடும் விராட், ரஹானே

தொடரை சமன் செய்வாரா விராட் கோஹ்லி; நிதானமாக ஆடும் விராட், ரஹானே

Advertisement

245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்தியாவிற்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. 22 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கோலி மற்றும் ரஹானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து புஜாரா களம் இறங்கினார்.

புஜாராவை 5 ரன்னிலும், ஷிகர் தவானை 17 ரன்னிலும் வெளியேற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதனால் இந்தியா 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இதுவரை 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்துள்ளது. விராட் கோலி 42 ரன்னுடனும், ரகானே 36 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 144 ரன்கள் தேவை. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#4th test #eng vs ind 4th test #rahane #kholi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story