வேறொரு பெண்ணுடன் நெருக்கம்?.. ஸ்ம்ருதி மந்தனாவின் திருமணம் ரத்து.. நடந்தது என்ன?.!
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்ம்ருதி மந்தனா, தனது திருமணம் ரத்து செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்ம்ருதி மந்தனா, தனது திருமணம் ரத்து செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வதந்திகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்ம்ருதி மந்தனா மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷாங்கிலியை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இந்திய மகளிர் அணி உலக கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றியவர் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியின் கேப்டனாகவும் இவர் இருந்து வருகிறார். இதனால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நபராகவும் இருக்கிறார்.
ஸ்ம்ருதி மந்தனா திருமணம்:
29 வயதாகும் மந்தனாவுக்கும், இசையமைப்பாளரான மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சாலா என்பவருக்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்பட்டது. இவர்கள் சில நாட்களுக்கு முன்னதாக மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்ட நிலையில், இருவரின் திருமணமும் நவம்பர் 23 நடைபெறுவதாக இருந்தது. இது தொடர்பான கொண்டாட்டங்களும் அடுத்தடுத்த நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: திடீரென நின்றுபோன ஸ்மிருதி மந்தனாவின் திருமணம்! தாலி காட்டும் முன் வந்த ஷாக் நியூஸ்.!! ரசிகர்கள் மத்தியில் வருத்தம்!
தந்தைக்கு நெஞ்சுவலி:
இதனிடையே ஸ்ம்ருதி மந்தனாவின் தந்தைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திருமணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இசையமைப்பாளர் பலாஷ் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி பல்வேறு ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகின. இதனால் மந்தனாவுக்கு அவர் துரோகம் செய்ததாக கருத்துக்கள் பரவ தொடங்கிய நிலையில் பேசு பொருளானது.
திடீர் பதிவு:
மேலும் மந்தனாவும் திருமணத்தை நிறுத்திவிட்டு இதற்கு முன்னதாக பதிவு செய்த வீடியோ மற்றும் புகைப்படங்களை நீக்கினார். இது பலரது மத்தியில் சந்தேகத்தை கிளப்பிய நிலையில், தற்போது அவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கடந்த சில வாரங்களாகவே எனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பல விஷயங்கள் பேசப்படுகின்றன. இதனை நான் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.
திருமணம் ரத்து:
அதனை அப்படியே வைத்திருக்க தான் விரும்புகிறேன். எனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்ற தகவலை மட்டும் அதிகாரப்பூர்வமாக கூறுகிறேன். இந்த விஷயத்துடன் முடித்துக் கொள்ளவும் நான் விரும்புகிறேன். தயவு செய்து யாரும் என தனிப்பட்ட வாழ்க்கையை இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கிரிக்கெட் போட்டியில் எனது பங்கை சரியாக ஆற்றுவேன்" என கூறியுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஸ்மிருதி மந்தனா வுக்கு துரோகம் செய்த காதலர்? மற்றொரு பெண்ணை ஸ்விம்மிங் செய்ய அழைத்து..... திருமண புகைப்படங்களை நீக்கிய ஸ்மிருதி!