நீங்கள் 12வது வீரராக களமிறங்கினாலும் சதம் அடிப்பீர்கள்! இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய ஷிகர் தவான்!
sikar dhawan appriciate young player
இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடந்த T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணியின் இளம் வீரர் கே.எல்.ராகுல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் கே.எல்.ராகுல் 112 ரன்கள் குவித்தார். தொடரில் மொத்தமாக 204 ரன்கள் குவித்த அவரை இந்திய அணியின் துவக்க அதிரடி வீரர் ஷிகர் தவான் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ஷிகர் தவான் அவரது இன்ஸ்டாகிராமில், “சிறப்பாக விளையாடினீர்கள். அற்புதமான சதம் சகோ. உறுதியுடன் முன்னேறுங்கள். இதேபோல் பேட்டிங் செய்தால் நீங்கள் 12வதாக இறங்கினால் கூட சதம் அடித்து விடுவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் கே.எல்.ராகுலை, ஷிகர் தவானிற்கு மாற்று வீரராக கொண்டுவருவார்களா? என்ற கேள்விகள் பரவும் நிலையில், ஷிகர் தவான் கே.எல்.ராகுலை பாராட்டியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டும் வகையில் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்