×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆஹா..! இவர் ஒருவர் நினைத்தால் தோனி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவார்..! முன்னாள் பாகிஸ்தான் வீரரின் அதிரடி யோசனை..!

Shoaib Akthar request Indian PM to ask Dhoni to play T20

Advertisement

இந்திய பிரதமர் கேட்டுக்கொண்டாள் தோனி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள T20 கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது. அந்த ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட் இன்றுவரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.

அந்த போட்டிக்கு பிறகு தோனி எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்திய அணியின் சீருடையில் தோனியை மீண்டும் எப்போது பார்ப்போம் என ரசிகர்கள் காத்துக்கிடக்கும் நிலையில் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக தோனி கடந்த 15 ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது தீவிர ரசிகர்களால் இன்றுவரை தோனியின் ஓய்வை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றே கூறலாம். தோனி மீண்டும் இந்திய அணிக்காக விளையாட ஏதாவது முயற்சி நடக்காத என ரசிகர்களின் மனதில் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் சோயப் அக்தர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய பிரதமர் மோடி நினைத்தால் வர உள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில் தோனி விளையாடலாம் என்று கூறியுள்ளார்.

இந்திய பிரதமர் மோடி அவர்கள் கேட்டுக்கொண்டால் தோனி தட்டாமல் டி-20 உலகக்கோப்பையில் கலந்து கொள்வார் எனவும் தோனிக்காக ஃபேர்வெல் போட்டி ஒன்றும் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துளளார்.மேலும் அனைவரும் பிரதமரிடம் இந்த கோரிக்கையை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சோயப் அக்தர் பேசியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dhoni #t20 world cup
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story