ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் இனி இவர்தான்! சுரேஷ் ரெய்னா வெளியிட்ட அதிரடி தகவல்!
shen watson is a sub captain in csk ipl

ஐபிஎல் சீசன் 13 வது தொடர் அடுத்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க உள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், சென்னை சிஎஸ்கே அணி தீவிர பயிற்சி மேற்கொள்ள உள்ளது. மேலும் மார்ச் 1ஆம் தேதி துவங்கி இரு வாரங்கள் பயிற்சி நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி இல்லாத ஆட்டங்களில் துணை கேப்டனாக செயல்பட்ட சுரேஷ் ரெய்னா சமீபத்தில் ஐபிஎல் தொடர் குறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு டோனி விளையாட முடியாத போட்டிகளில் நான் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டேன். ஆனால் அந்தப் போட்டிகளில் ஒரு கேப்டனாக என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதனால் இம்முறை நான் துணை கேப்டனாக செயல்பட போவதில்லை.
எனக்கு பதிலாக சென்னை அணியின் துணை கேப்டனாக முன்னணி அதிரடி வீரரான ஷேன் வாட்சன் செயல்பட உள்ளார். அவர் ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக வழி நடத்தியவர் நிறைய அனுபவம் கொண்டவர். அவனது அனுபவம் கண்டிப்பாக வெற்றியை பெற்று தரும் என்று கூறியுள்ளார்.