×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இவரை முதலில் CSK அணியில் இருந்து தூக்கிட்டு இவரை இறக்குங்க.! மூத்த வீரர் அட்வைஸ்.!

இவரை முதலில் CSK அணியில் இருந்து தூக்கிட்டு இவரை இறக்குங்க.! மூத்த வீரர் அட்வைஸ்.!

Advertisement

ஐபிஎல் தொடரில் 3 முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக திகழ்ந்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் படுமோசமாக சொதப்பி முதல்முறையாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால், சிஎஸ்கேவின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் கூறி வந்த நிலையில், இந்தாண்டு வெற்றிகளை குவித்து, முதல் அணியாக பிளே ஆஃப்க்கு முன்னேறி விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளது.

இந்த சீசனில் சுரேஷ் ரெய்னா சரியான ஃபார்மில் இல்லாமல், ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறார். சிஎஸ்கே அணியின் பெரிய பலமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுப்ளெசிஸ் ஆகிய இருவரும் உள்ளனர். 

சுரேஷ் ரெய்னா இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 160 ரன்களை மட்டுமே அடித்துள்ளதாகவும், முக்கியமான நேரத்தில் அடிக்க வேண்டிய இடத்தில் ரெய்னா ஆட்டமிழந்து வெளியேறுவதால் அணியின் ஸ்கோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் அளித்த பேட்டியில், சிஎஸ்கே அணி வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும் என்றால் ரெய்னாவை நீக்கியே ஆக வேண்டும் எனக் கூறினார். சிஎஸ்கே எப்போதுமே மாற்றங்களை விரும்பாத அணி. ஆனால், இனி வரும் போட்டிகளிலும் வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும் என்றால், அந்த அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடியே ஆக வேண்டும். 

சுரேஷ் ரெய்னா சிக்ஸர்களை அசால்ட்டாக அடிக்க கூடியவர். சிறந்த பந்து வீச்சாளரும் கூட. பீல்டிங்கிலும் மிரட்டக் கூடியவர். ஆனால், இந்த சீசன் முழுவதிலும் ரெய்னாவின் சிறந்த ஆட்டத்தை பார்க்க முடியவில்லை. ரெய்னா மீண்டும் பழைய பார்முக்கு வரமுடியாமல் திணறுகிறார். இதனால், உத்தப்பாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்க வேண்டும். இது சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய நன்மை தரவும் வாய்ப்புள்ளது எனத்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ipl #suresh raina #csk
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story