போராளி வீரர்... ஐசியூவில் உயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்..! ஆப்கானிஸ்தான் அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்த இவருக்கா இந்த நிலைமை.... கவலையில் ரசிகர்கள்!!!
ஆப்கானிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஜத்ரான் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி. உடல்நிலை கவலைக்கிடம்; கிரிக்கெட் உலகம் முழுவதும் பிரார்த்தனை.
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஜத்ரான், கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுவில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் உலகம் முழுவதும் அவருக்காக பிரார்த்தனைகள் அதிகரித்துள்ளன.
உடல்நிலையில் திடீர் பாதிப்பு
38 வயதான ஜத்ரானுக்கு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு ஆபத்தான அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உடல் நிலை வேகமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
கிரிக்கெட் உலகின் ஆதரவு
இந்த செய்தி வெளிவந்ததும் பல கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், மருத்துவமனையில் உள்ள ஜத்ரானின் புகைப்படத்தை பகிர்ந்து, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவு செய்தார். அதேபோல், முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, ஜத்ரானின் சகோதரருடன் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்துள்ளார்.
இதையும் படிங்க: மூத்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு ICU வில் தீவிர சிகிச்சை! மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.! ரசிகர்கள் பிரார்த்தனை!
போராளி வீரரின் பயணம்
2009-ஆம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜத்ரான், ஆப்கானிஸ்தான் அணிக்காக 80 போட்டிகளில் விளையாடியுள்ளார். இடதுகை வேகப்பந்து வீச்சில் பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றிகளை தேடித்தந்தவர். அவரது உடல்நிலை கவலைக்கிடம் என்ற தகவல் ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
மைதானத்தில் எப்போதும் போராளியாக விளங்கிய அவர், இந்த சவாலையும் கடந்து மீண்டும் களமிறங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: என்னை யாரவது காப்பாத்துங்க.... கருப்பாக மாறிய சிறுநீர்! மஞ்சளாக மாறிய கண்கள்! உதவி கேட்டு கண்ணீர் விட்டு கதறிய பெண்ணின் வீடியோ!