சச்சின் டெண்டுல்கரின் தாய் பாசம்! பாசத்துடன் அவர் வெளியிட்ட புகைப்படம்!
Sachin tendulkar wishes to his mom
உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள், நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களின் அம்மாவிற்கும் உலகம் முழுக்க இருக்கும் பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அம்மா என்ற வார்த்தைக்கு பணியாதவர்கள் யாரும் இல்லை. தாயை சிறந்ததொரு கோவிலும் இல்லை என்ற பாடலுக்கு ஏற்றவாறு தாயை வணங்காதவர்கள் யாரும் இல்லை. இன்றைய அன்னையர்தினத்தன்று பலரும் தங்களது தாய்க்கு அன்னையர்தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல வீரர்கள் தங்களின் அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் அம்மா, நீங்கள் எப்போதும் எனக்கு ஒரு ஏஏஐ (AAI) என்று நான் குறிப்பிடுவேன். ஏனென்றால் நீங்கள் எனக்கு எப்போதும் சிறப்பானவர் அதோடு ஈடுஇணையற்றவர் (Always Amazing & Irreplaceable.) எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி அம்மா என தெரிவித்து தனது அம்மா சிறு வயதில் தன்னை தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை சேர்த்து பகிர்ந்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362