×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேற லெவல் கேட்ச்...! காற்றில் பறந்து வந்து லாவாகமாக பந்தை பிடித்த ரோகித் சர்மா! மிரள வைக்கும் காணொளி...!!!

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 39 வயதான ரோகித் சர்மா பறந்து பிடித்த அசத்தலான கேட்ச் ரசிகர்களையும் இந்திய அணி வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

Advertisement

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பிடித்த அசத்தலான கேட்ச் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 39 வயதிலும் மின்னல் வேகத்தில் பாய்ந்து அவர் பிடித்த இந்தக் கேட்ச், மைதானத்தில் இருந்த வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுதொடர்பான காட்சிகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளன.

ஃபின் ஆலன் அடித்த பந்தை பாய்ந்து பிடித்த ரோகித்

மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி முதலில் பந்துவீசியது. அப்போது சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் வீசிய பந்தை நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் எதிர்கொண்டார். அந்தப் பந்தை உயரமாக அடிக்க முயன்ற அவர், கவர் திசையை நோக்கி ஷாட் அடித்தார்.

இதையும் படிங்க: மைதானத்தின் நடுவே வெட்டப்பட்ட கே.எல். ராகுல் ஜெர்சி! கூட விராட் கோலியும்... அங்கு நடந்தது என்ன..?

அந்தப் பகுதியில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ரோகித் சர்மா, பந்து தன்னை நோக்கி வருவதைக் கவனித்ததும் வலதுபுறமாக முழு வேகத்தில் பாய்ந்தார். பந்து தரையில் விழுவதற்கு முன்பாகவே காற்றில் தாவி அதை லாவகமாகப் பிடித்தார். இதனால் ஃபின் ஆலனின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ரோகித்தை பாராட்டிய இந்திய அணி வீரர்கள்

ரோகித் பிடித்த கேட்சைக் கண்டு உற்சாகமடைந்த இந்திய அணி வீரர்கள், அவரை நோக்கி ஓடிவந்து கட்டியணைத்துப் பாராட்டினர். பேட்டிங்கில் அதிரடி காட்டுவதற்குப் பெயர் பெற்ற ரோகித், தனது ஃபீல்டிங் திறமையாலும் கவனம் ஈர்த்துள்ளார்.

39 வயதிலும் அவரது வேகமும் துடிப்பும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளன. அக்ஸர் படேல் பந்துவீச்சில் கிடைத்த இந்த விக்கெட் இந்திய அணிக்கு முக்கியமானதாக அமைந்தது. ரோகித்தின் இந்த அற்புதமான கேட்ச் தொடர்பான வீடியோவும் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: மைதானத்தின் நடுவே வெட்டப்பட்ட கே.எல். ராகுல் ஜெர்சி! கூட விராட் கோலியும்... அங்கு நடந்தது என்ன..?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ரோகித் சர்மா கேட்ச் #இந்தியா நியூசிலாந்து போட்டி #அக்ஸர் படேல் #Rohit Sharma Catch #India vs New Zealand ODI
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story