×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நேற்றைய போட்டியின் மூலம் தோனியை பின்னுக்கு தள்ளி, விராட் கோலியின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார் ரோகித் சர்மா!

rohit sharma new record

Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, நேற்று நடந்த முதல் டி20  போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது, இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 41 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் வங்கதேச அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் விளையாடியதின் மூலம் அதிகபடியான சர்வதேச டி-20 போட்டியை விளையாடி இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.

மேலும் சர்வதேச அளவில் அதிக டி-20 போட்டிகள் விளையாடிய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் நேற்றைய  போட்டியில் ரோகித் சர்மா 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார், ஆனால் விராட் கோலியின் டி-20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த சாதனையை முறியடித்து சர்வதேச டி-20 போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rohit #virat
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story