×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாதா கங்குலி, கடவுள் சச்சினை பின்னுக்குத்தள்ளி முன்னேறிய டான் ரோஹித்!

Rohit increased on sachin and Ganguly

Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வென்றிருந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 4 ஓட்டங்கள் எடுத்த போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ஓட்டங்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார்.

ரோஹித் ஷர்மா தனது 217ஆவது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ஓட்டங்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி (194 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார்.

முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ் (208) இரண்டாவது இடத்தில் உள்ளார். முன்னாள் இந்திய வீரர்களான சவுரவ் கங்குலி (228), சச்சின் (235), மேற்கிந்திய தீவுகள் அணியின் லாரா (239) ஆகியோர் இப்பட்டியலில் 4, 5, 6ஆவது இடங்களில் உள்ளனர். இந்தநிலையில் கங்குலி, சச்சினை பின்னுக்கு தள்ளி ரோஹித் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rohit #sachin #ganguly
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story