×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்துவதற்கு இந்த விசயங்கள் தான் காரணமாம்! என்னென்ன தெரியுமா?

Reasons behind india beating australia

Advertisement

உலகக்கோப்பை தொடரின் 14ஆவது ஆட்டம் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகமாக அமையும் என முன்னரே கணிக்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போலவே கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது இந்திய அணிக்கு ஆரம்பத்திலே சாதகமாக அமைந்தது.

அடுத்ததாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவருமே நல்ல பார்மிற்கு திரும்பியுள்ளனர். முதல விக்கெட்டிற்கு இருவரும் சேர்ந்து 127 ரன்கள் அடித்தனர். பின்னர் வந்த கோலியும் 82 ரன்கள் அடித்தனர். இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களுமே நல்ல ஸ்கோரை அடித்தனர்.

இந்த போட்டியில் இந்திய அணியின் தலைமை எடுத்த முக்கிய திருப்புமுனையான முடிவு ஹர்டிக் பாண்டியாவை நாண்காவது வீரராக இறக்கியது தான். இந்திய அணியினர் 350 ரன்கள் நிச்சயம் எடுத்தாக வேண்டும் என்ற சூழல் உருவானது. அதற்காகவே பாண்டியாவை முன்னரே களமிறக்கினர்.

இருப்பினும் பாண்டிய சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆக வேண்டியது. பாண்டியா கொடுத்த கேட்சினை கீப்பர் அலெக்ஸ் கேரி கோட்டைவிட்டார். அதன்பின்பு பாண்டியா 27 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார். இந்திய அணி 352 ரன்கள் அடிக்க இதுதான் முக்கிய காரணம். இல்லையென்றால் இந்தியா 320 - 330 ரன்கள் தான் அடித்திருக்க முடியும். இதனை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் எட்டிப் பிடித்திருப்பர்.

அடுத்ததாக புவனேஷ்வர் குமார் வீசிய 40 ஆவது ஓவர். இந்த ஓவரில் அவர் ஸ்மித் மற்றும் ஸ்டாயின்ஸ் என இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிலும் ஸ்மித்திற்கு அம்பயர் எல்பிடபுல்யூ அவுட் கொடுக்காத போது கோலி ரிவியூ கேட்டதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை.

அலெக்ஸ் கேரி கடைசியில் 35 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார். 40 ஆவது ஓவரில் மட்டும் அந்த இரண்டு விக்கெட்டுகள் கிடைக்காமல் இருந்தாருந்தால் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றிருக்க அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும். எப்படியோ ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#wc2019 #ind vs aus #Hardik pandya #Virat Kohli #Bhuvaneswarkumar
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story