×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடைசி கட்டத்தில் தலைகீழாக மாறிய ஆட்டம்.! திக்.. திக்.. த்ரில் வெற்றி.!

14-வது ஐபிஎல் சீசனின் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெ

Advertisement

14-வது ஐபிஎல் சீசனின் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினர். 

படிக்கல் 11 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக ஆடிய கேப்டன் விராட் கோலி 33 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நிதானமாக ஆடிய மேக்ஸ்வெல் 59 எடுத்தநிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சன்ரைசர்ஸ் அணி. அந்த அணியின் துவக்க வீரர் சஹா ஒரு ரன் எடுத்தநிலையில் அவுட் ஆனார். சிறப்பாக ஆடிய வார்னர், 54 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார்.

16 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசி 4 ஓவரில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலையில் இருந்தது சன்ரைசர்ஸ் அணி. 17வது ஓவரை வீசிய ஷபாஸ் அகமது, அந்த ஓவரில் பேர்ஸ்டோ, மனீஷ் பாண்டே மற்றும் அப்துல் சமாத் ஆகிய முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#srh #rcb #ipl
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story