×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நேற்றைய ஆட்டத்தின் வெற்றியால் புள்ளி பட்டியலில் முன்னேறிய பெங்களூரு அணி.! புள்ளிபட்டியல் முழு விவரம்..!

கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன், பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 2- ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Advertisement

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 39 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அணைத்து அணிகளும் இனி நடக்கும் ஆட்டங்களில் எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளன. 

தற்போது புள்ளி பட்டியலில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7 ஆட்டங்களில் வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதல் இடத்திலும், அதேபோல் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7 ஆட்டங்களில் வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் பெங்களூரு அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 6 ஆட்டங்களில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 5 ஆட்டங்களில் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன்
நான்காவது இடத்தில் கொல்கத்தா அணி உள்ளது. இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 4 ஆட்டங்களில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஐந்தாவது  மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளது. இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 3 ஆட்டங்களில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி ஏழாவது இடத்திலும், இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 3 ஆட்டங்களில் வெற்றிபெற்று அதே 6 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வது இடத்திலும் உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ipl #rank #rcb
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story