×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரண்டாவது முறை பட்டம் வெற்ற RCB கொண்டாட்டம்.... குதூகலத்துடன் மனைவியுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி! கலக்கல் டான்ஸ் வீடியோ..!!!

ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்திய ஆர்சிபி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தது.

Advertisement

ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், விராட் கோலியின் அதிரடி ஆட்டம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கோலியின் அதிரடி ஆட்டம்

முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 156 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்கத்திலிருந்தே விராட் கோலி நம்பிக்கையூட்டும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்த அவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் தனது ஐபிஎல் வாழ்க்கையின் அதிவேக அரைசதத்தையும் பதிவு செய்தார்.

போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில், கடைசி ஓவரில் கோலி விளாசிய சிக்ஸர் வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி இலக்கை எட்டி, மீண்டும் சாம்பியன் மகுடத்தை தக்கவைத்துக் கொண்டது.

இதையும் படிங்க: சந்தோஷத்தில் ஓடி வந்து கொடுத்த முத்தம்! வெற்றி மேடையில் காதலியுடன் படுத்த ஹர்திக் பாண்டியா! சர்ச்சையான வீடியோ காட்சி!!!

ஒரே மைதானத்தில் தொடரும் வெற்றி வரலாறு

கடந்த ஆண்டு இதே நரேந்திர மோடி மைதானத்தில்தான் ஆர்சிபி அணி தனது 18 ஆண்டுகால கோப்பை காத்திருப்புக்கு முடிவு கட்டி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது அதே மைதானத்தில் மீண்டும் கோப்பையை கைப்பற்றியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஓராண்டிற்குள்ளேயே இரண்டாவது கோப்பியை வென்றிருப்பதால், அணியின் முகாமில் கொண்டாட்டம் களைகட்டியது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

வைரலாகும் கொண்டாட்ட காட்சிகள்

போட்டி முடிந்ததும் ஆர்சிபி அணி தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் விராட் கோலி மிகுந்த உற்சாகத்துடன் தனது மனைவி அனுஷ்கா சர்மா, முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் அணியின் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இணையத்தில் வேகமாக பரவி வரும் அந்த காட்சிகள், ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

 

இதையும் படிங்க: சுவாரஸ்ய தருணம்.... ஆட்டத்தில் சாம்சன் செஞ்ச வேலையைப் பாருங்க! வைரலாகும் கலகலப்பு வீடியோ!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2026 #rcb #விராட் கோலி #Gujarat Titans #கிரிக்கெட் செய்திகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story