தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா லக்னோ..?!! ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்..!!

தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா லக்னோ..?!! ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்..!!

Rajasthan Royals vs Lucknow Super Giants will face each other in the 26th League match in Jaipur today. Advertisement

ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் 26 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 25 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 26 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அனி இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்று  ஐதராபாத், டெல்லி, சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக தலா 1 வெற்றியும் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு தோல்வியும் பெற்று  8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 போட்டிகளில் பங்கேற்று டெல்லி, ஐதராபாத் மற்றும்  பெங்களூரு அணிகளுக்கு எதிராக தலா 1 வெற்றியும், சென்னை, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 1 தோல்வியும் பெற்று  6 புள்ளிகளுடன்  2 வது இடத்தில் இருக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். நடப்பு தொடரில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் ராஜஸ்தான் அணிக்கு லக்னோ அணி முட்டுக்கட்டை போடுமா? என்ற எதிர்பார்ப்பு லக்னோ ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rajasthan royals #Lucknow Super Giants #RR vs LSG #IPL 2023 #ipl t20
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story