×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாவம்.. இப்படியா அவுட் ஆவது..? இந்திய வீரருக்காக மீண்டும் ஒருமுறை வருந்திய ரசிகர்கள்.. வைரல் வீடியோ..

இந்திய அணி வீரர் புஜாரா மீண்டும் வித்தியாசமான முறையில் அவுட் ஆன வீடியோ இணையத்தில் வைரலாகிவ

Advertisement

இந்திய அணி வீரர் புஜாரா மீண்டும் வித்தியாசமான முறையில் அவுட் ஆன வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில், இங்கிலாந்து அணி 134 ரங்களில் ஆட்டம் இழந்தது.

இதனை தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடிவரும்நிலையில், பேட்டிங் செய்துகொண்டிருந்த இந்திய அணி வீரர் புஜாரா மிகவும் வித்தியாசமான முறையில் ஆட்டம் இழந்தார். அவர் 7 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடிக்கொண்டிருந்தபோது, மொயீன் அலி வீசிய பந்தை ஷார்ட் லெக் திசையில் அடித்தார்.

அப்போது அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த ஆலி போப், பந்தை எடுத்து கீப்பரிடம் வீச, கீப்பர் பந்தை பிடித்து ரன் அவுட் செய்தார். இந்நிலையில் கிரீஸுக்கு வெளியே நின்று பேட்டிங் செய்துகொண்டிருந்த புஜாரா உடனே பேட்டை நீட்டி உள்ளே வர முயன்றார், ஆனால் அவர் நீட்டிய பேட் அங்கே இருந்த குழிக்குள் சிக்கியதால் அவர் கையிலிருந்து பேட் நழுவி கீழே விழுந்தது. இதனால், அவர் மிகவும் அதிர்ஷ்டமில்லாத வகையில் ரன் அவுட்டானார்.

இதற்கு முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியிலும், சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த புஜாரா, டாம் பெஸ் வீசிய பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். அப்போது அவர் அடித்த பந்து ஸார்ட் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் நின்ற வீரரின் ஹெல்மெட்டில் பட்டு, அந்த பந்து வேகமாக சென்று மிட் ஆன் திசையில் நின்ற வீரரிடம் கேட்ச் ஆனது.

புஜாரா எங்கேயோ ஷாட் அடிக்க, அந்த பந்து ஹெல்மெட்டில் பட்டு வேறு திசை சென்று அவுட் ஆனார். தற்போது மீண்டும் ஒருமுறை அவர் துரதிஷ்டவசமாக அவுட் ஆகியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cricket #Ind vs England #Viral News
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story