×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனக்கிட்ட நேரடியா மோதுங்க..! சீண்டிப் பார்க்கும் பொல்லார்ட்.! ரோகித் சர்மா மீதான விரக்தியா.?

மும்பை இந்தியன்ஸ் அணியின் துணைக்கேப்டன் பொல்லார்டின் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

2020 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. அந்த ஆட்டத்தில் 17.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 151 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது சன்ரைசர்ஸ் அணி.

அந்த ஆட்டத்திற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் துணைக்கேப்டன் பொல்லார்ட் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், "என்னை ரகசியமாக வீழ்த்தும் நண்பனை விட, வெறுக்கிறேன் என நேரடியாகக் கூறும் எதிரி எனக்கு இருக்க வேண்டும்" என பதிவிட்டிருந்தார். அவரது பதிவு ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அந்த பதிவு ரோகித் சர்மாவைக் குறிப்பிட்டுதான் பொல்லார்டு பகிர்ந்துள்ளார் என ஒரு தரப்பினரும், ஐதராபாத் அணியின் வீரர் ஹோல்டரைக் குறிப்பிட்டு தான் பகிர்ந்திருக்கிறார் என மற்றொரு தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பதவி ஹோல்டருக்கு வழங்கப்பட்டதால் பொல்லார்டு விரக்தியில் உள்ளார் என்றும், மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை தன்னிடம் இருந்து திரும்பப் பெற்றதால் அதிருப்தியில் உள்ளார் என சிலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pollard angry #ipl #Mumbai indians
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story