பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் செய்த காரியம்! நெகிழ்ச்சியில் இந்தியர்கள். வைரல் வீடியோ.
Pakistani cricketers and taxi driver together on dinner table

ஆஸ்திரலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவருகிறது. பிரிஸ்பேனில் நடந்த போட்டியன்று பாகிஸ்தான் வீரர்கள் ம்ரான் கான், நசீம் ஷா, முஹம்மத் முசா, ஷஹீன் அப்ரிடி மற்றும் யாசிர் ஷா ஆகியோர் ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட முடிவு செய்து வெளியே சென்றுள்ளனர்.
பாகிஸ்தான் வீரர்கள் அந்த பகுதிக்கு புதிது என்பதால் இந்தியா அல்லது பாகிஸ்தான் உணவு கிடைக்கும் சிறந்த ரெஸ்டாரண்ட் எங்கு இருக்கும் என்று தெரியாமல் குழம்பியுள்னனர். இதனால் அந்த வழியே வந்த டாக்சி ஓன்று பிடித்து அவரிடம் தங்கள் நிலையை கூறி நல்ல ரெஸ்டாரண்டிற்கு செல்லுமாறு கூறியுள்னனர்.
அந்த டாக்சியை ஓட்டிவந்தவர் பாஜி என்ற இந்தியர். தனது காரில் இருப்பது பிரபல பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர்கள் என்பதை அறிந்துகொண்ட பாஜி அவர்களிடம் சகஜமாக பேசியதோடு கிரிக்கெட் குறித்தும் விவாதித்துள்ளார்.
இறுதியில் ரெஸ்டாரண்ட் வந்ததும் பாகிஸ்தான் அணி வீரர்கள் டாக்சியில் இருந்து இறங்கி பயணத்திற்கான பணத்தை பாஜியிடம் கொடுத்துள்னனர். ஆனால், பாஜி அதை வாங்க மறுத்துள்ளார். இதனால் நெகிழ்ச்சியடைந்த பாக் வீரர்கள் நீங்கள் இந்த பணத்தை பெற்றுக்கொள்ளவேண்டும், அல்லது எங்களுடன் சேர்ந்து உணவு அருந்த வேண்டும் என கேடுள்ளன்னர்.
உடனே, உணவருந்த சம்மதம் தெரிவித்துள்ளார் பாஜி. இந்தியரிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் காட்டிய அன்பு, கிரிக்கெட் உலகில் வைரலாகி பேசப்பட்டுவருகிறது.