×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானை கலங்கடித்த ஆஸ்திரேலிய வீரர்.

pakistan vs australia 2nd test match

Advertisement


பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் அபுதாபியில் தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா போராடி டிரா செய்தது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர் முகமது ஹபீஸ் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதன் பிறகு வந்த நான்கு வீரர்களையும் வெளியே அனுப்பி வைத்தார் நாதன் லியோன். ஒரு ஓவர் இடைவெளியில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

அதன் பிறகு பாகிஸ்தான் அணி 22 ஓவர்களில் 57 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது தடுமாறியது. 19.5வது பந்தில் அசார் அலி, 19.6வது பந்தில் ஹாரிஸ் சோஹைல்-ஐ வெளியேற்றினார் லியோன். 21வது ஓவரை ஹாலண்ட் மெய்டனாக வீசினார். 22வது ஓவரில் மீண்டும் பந்து வீசிய லியோன் 21.2வது பந்தில் ஷபிக் மற்றும் 21.4வது பந்தில் பாபர் ஆசம் ஆகியோரை வெளியேற்றி இந்த சாதனையை செய்தார். 

முடிவில் பாகிஸ்தான் அணி 282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, அதன் பிறகு பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இவர்களுக்கு 20 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Spark #pak vs australia #2nd test abudapi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story