அடுத்தடுத்து ஆட்டம் இழக்கும் பாகிஸ்தான் வீரர்கள்! கெத்து காட்டும் இந்தியா!
Pakistan lost two wickets in 6 overs asia cup 2018

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. கடந்த 15ம் தேதி துவங்கிய இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்தியாவின் பரம எதிரியாக பல வருடங்களாக பாவிக்கப்பட்டு வரும் பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 2.1 ஓவரில் புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார் இமாம் உல் ஹக். அவரை தொடர்ந்து 4.1 ஓவரில் புவேனஸ்வர் குமார் வீசிய பந்தில் பாகார் சாமென் ஆட்டம் இழந்தார்.
ஆரம்பத்திலேயே தொடக்க வீரர்கள் இருவரும் ஆட்டம் இழந்தது பாகிஸ்தான் அணிக்கு மிகவும் பின்னடைவாக உள்ளது.