×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோப்பையை வாங்க இந்தியாவுக்கு தகுதியில்லை.. பாகிஸ்தான் ரசிகர்கள் சர்ச்சை.. வைரல் வீடியோ!

கோப்பையை வாங்க இந்தியாவுக்கு தகுதியில்லை.. பாகிஸ்தான் ரசிகர்கள் சர்ச்சை.. வைரல் வீடியோ!

Advertisement

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 8-வது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கையை வீழ்த்திய நிலையில், போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழா சர்ச்சைக்குள்ளானது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்திய அணி முன்வரவில்லை. 

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜூம்தாரும், இது பிசிசிஐயின் நிலைப்பாட்டுடன் தொடர்புடைய முடிவு என்பதை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கமான முறையில் சாம்பியன் அணிக்கான கோப்பை வழங்கப்படாமல் பரிசளிப்பு விழா முடிவடைந்தது. 

இதையும் படிங்க: ஆசியக் கோப்பையை பெற மறுத்த இந்திய மகளிர் அணி.. பரிசளிப்பு விழாவில் பரபரப்பு.. தொடரும் சர்ச்சை!

கடந்த 2025 ஆடவர் ஆசியக் கோப்பையிலும் இந்திய அணி மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்த சம்பவம் நடைபெற்றிருந்த நிலையில், தற்போது மகளிர் அணியும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பரிசளிப்பு விழாவுக்குப் பின்னர் மைதானத்திற்கு வெளியே  வந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடம் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணிக்கு எதிராக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நீங்கள் எடுத்த முடிவு தான் சரியானது. இந்திய அணிக்கு கோப்பையை வாங்கும் தகுதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆசியக் கோப்பையை பெற மறுத்த இந்திய மகளிர் அணி.. பரிசளிப்பு விழாவில் பரபரப்பு.. தொடரும் சர்ச்சை!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Asia cup 2026 #INDWvsSLW #Harmanpreet Kaur #Mohshin Nagvi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story