×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்..! அதிர்ச்சி காரணம்..!

Pakistan cricketer umar akmal banned from local matches

Advertisement

பாகிஸ்தான் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான உமர் அக்மல் உடற்தகுதி போன்ற சில காரணங்களால் சர்வதேச அணியில் விளையாட முடியாமல் உள்ளார், இந்நிலையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடிவரும் இவருக்கு அதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்களும் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று  பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நடந்த உடற் தகுதி சோதனையில் உமர் அக்மல் உடம்பில் கொழுப்பு சற்று அதிகமாக இருப்பதாக கூறி அவர் உடற்தகுதி தேர்வில் வெற்றிபெறவில்லை என உடற்தகுதி பயிற்றுநர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உமர் அக்மல் தனது உடைகளை களைந்து, தனது உடலில் எங்கே கொழுப்பு உள்ளது என கேட்டுள்ளார். உமர் அக்மலின் இந்த அநாகரிக செயலால் அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் அடுத்த உள்நாட்டுத் தொடரில் முழுவதுமாக தடை செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cricket #Umar Akmal
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story