தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியாவை தோற்கடித்தால் என்னுடன் இரவு உணவு சாப்பிடலாம் - வங்கதேச அணிக்கு ஆபர் கொடுத்த பாக். நடிகை.!

இந்தியாவை தோற்கடித்தால் என்னுடன் இரவு உணவு சாப்பிடலாம் - வங்கதேச அணிக்கு ஆபர் கொடுத்த பாக். நடிகை.!

Pakistan Actress Offer to Bangladesh Cricket Team If You Defeat India Take Night Dinner With Me  Advertisement

 

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 13வது உலகக்கோப்பை சீசனை கிரிக்கெட் ரசிகர்கள் உச்சமாக நேரிலும், வீட்டில் இருந்தபடியும் கண்டுகளித்து வருகின்றனர். 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இந்தியா வெற்றி அடைந்தது. போர் பதற்றத்தை விட மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் ஆட்டத்தில், முக்கியமான ஆட்டமான இந்தியா - பாகிஸ்தான் விளையாட்டில் இந்தியா வெற்றி அடைந்தது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவிடம் தங்களின் அணி தோல்வி அடைந்ததை எண்ணி வருத்தத்திலும், ஆத்திரத்திலும் இருந்து வருகின்றனர். தங்களின் அணிக்கு வலுவான கருத்துக்களை தெரிவித்து, அணியினரை உற்சாகப்படுத்துகின்றனர். 

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சேகர் சின்வாரி, அக்.19 அன்று நடைபெறும் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், வங்கதேச அணி இந்தியாவை தோற்கடித்தால் தன்னுடன் இரவு உணவு சாப்பிட வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் ஏற்பாடு செய்வதாக வங்கதேச அணியினருக்கு ஃஆபர் கொடுத்துள்ளார். மீன் உணவு சாப்பிட நடிகை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் அரையிறுதி சுற்றில், இந்தியா தோல்வியடைந்து வெளியேறும். நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதி, உலகக்கோப்பை பாகிஸ்தான் வசப்படும். பாபர் அஸாம் உலகக்கோப்பை 2023ன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்படுவார்" எனவும் பாக். நடிகை தெரிவித்து இருக்கிறார். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pakistan actress #sports #ICC World Cup 2023 #bangladesh #Pakistan #India #பாகிஸ்தான் நடிகை #விளையாட்டு #ஐசிசி உலகக்கோப்பை 2023
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story