ஐபிஎல் ஏலம் 2020.. ஏலத்தில் எடுக்கிப்பட்ட ஒரே இலங்கை வீரர்! அதுவும் எந்த அணி வாங்கியுள்ளது பார்த்தீர்களா?
one srilanka cricket player only buy in ipl auction

ஐபிஎல் டி20 கிரிக்கெட் ரசிகர்களால் பெருமளவில் எதிர்பார்க்கும் ஒன்றாகும். ஆண்டு தொடரும் நடந்து வரும் இந்த போட்டி 12 நிறைவடைந்த நிலையில் 13 ஆவது சீசன் அடுத்த ஆண்டு தொடங்குகிறது.மேலும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் நேற்று கொல்கத்தாவில் தொடங்கியது.
146 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 332 வீரா்கள் ஏலம் எடுக்கும் பட்டியலில் உள்ளனர். இதில் 73 வீரா்களை 8 அணிகள் தோ்வு செய்யவேண்டும் என்ற நிலையில் மொத்தமாக 62 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.இதில் 29பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.
இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இசுரு உடனா என்பவரை மட்டும் ரூ 50 லட்சம் கொடுத்து பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ் அணி தங்கள் அணிக்கு ஏலம் வாங்கியது. மேலும் அவரை தவிர எந்த இலங்கையை சேர்ந்த வீரர்களும் ஏலம் எடுக்கப்படவில்லை.