தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விராட் கோலியால் கூட சச்சினின் இந்த சாதனையை முறியடிக்க முடியாது! சேவக் பேச்சு!

no one beat sachin record

no one beat sachin record Advertisement



தற்போதைய இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல வீரர்களின் சாதனைகளையும் முறியடித்து வருகிறார். ஒவ்வொரு போட்டியின்போதும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

டெஸ்ட், ஒருநாள், டி20 என அணைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் விரைவாக 11 ஆயிரம் ரன்களை கடந்தார்.+

virat

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 2 சதம் அடித்து விராட் கோலி சாதனைப்படைத்தார். 77 டெஸ்டில் 6613 ரன் குவித்துள்ள விராட் கோலி இந்த டெஸ்ட் தொடரில் பல்வேறு சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை விராட் கோலியால் முறியடிக்க முடியாது என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "தற்போது சிறந்த துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தான். அவர் சதம் அடிக்கும் விதம், ரன்கள் குவிக்கும் விதம் என அனைத்துமே சிறப்பானது தான்.

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சினின் பல்வேறு சாதனைகளை விராட் கோலி நிச்சயம் முறியடிப்பார். ஆனால், சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் பங்குப் பெற்றுள்ளார். இந்த ஒரு சாதனையை விராட் கோலியால் கூட முறியடிக்க முடியாது. எந்த ஒரு வீரரும் அதனை முறியடிப்பார் என எனக்கு தோன்றவில்லை" என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#virat #Sachin tendulkar #Kohli
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story