உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை தரைமட்டமாக்கிய நியூசிலாந்து! மல்லுகட்டும் கத்துக்குட்டி
Newzland collapsed top most batsmen

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நேற்று மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
எளிமையான இலக்கை வென்றுவிடலாம் என்ற கனவோடு பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. ஆட்டத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது ஓவர்களில் ரோகித் சர்மா(1), விராட் கோலி (1), லோகேஷ் ராகுல்(1) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து 10 ஆவலு ஓவரில் ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களிலேயே முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதன் பிறகு ஜோடி சேர்ந்த கத்துகுட்டிகளான ரிஷப் பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டியா 15 ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காமல் ஆடி வருகின்றனர். 15 ஓவர்கள் முடிவில் இந்தியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் எடுத்துள்ளது. இனிமேல் தோனி மட்டும் தான் உள்ளார்.
உலகின் பேட்டிங் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் 1 ரன்னில் ஆட்டமிழக்க வைத்து அசத்தினர்.