×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பரபரப்பாக தொடங்கிய முதல் டெஸ்ட்..! நியூசிலாந்தை கதறவிட்ட ஆண்டர்சன்.! வைரல் வீடியோ.!

பரபரப்பாக தொடங்கிய முதல் டெஸ்ட்..! நியூசிலாந்தை கதறவிட்ட ஆண்டர்சன்.! வைரல் வீடியோ.!

Advertisement

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி  முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. நேற்றய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தெரிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் லாதம் மற்றும் வில் யங்கை இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அவுட் ஆக்கினார். அதன் பின்னர் அறிமுக வீரர் மாட்டி போட்ஸின் பந்துவீச்சில் கேன் வில்லியம்சன் அவுட் ஆகினார். அடுத்தடுத்து நியூசிலாந்து அணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தால் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் பாட்ஸ் தலா 4 விக்கெட்டுகளையும், பிராட் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜாக் கிராவ்லி 43 ரன்களும், ஆலி போப் 7 ரன்களும், ஜோ ரூட் 11 ரன்களும், அலெக்ஸ் லீஸ் 25 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னும், ஜானி பேர்ஸ்டோ 1 ரன்னும், மேத்யூ போட்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்தின் பந்துவீச்சு இருந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 116 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட், சௌதி, ஜேமிசன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கிராண்ட்ஹோம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#newzealand #England #test match
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story