×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வரலாறு படைத்த வங்கதேசம்! சுருண்டு விழுந்த தென் ஆப்ரிக்கா!

new record in yesterday match

Advertisement

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

உலகக்கோப்பை தொடரில் தன் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது தென்னாப்பிரிக்கா. இதனால் வங்கதேச அணியை வீழ்த்தும் முனைப்பில் நேற்று இரண்டாவது போட்டியில் களமிறங்கியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

வங்கதேச அணியின் துவக்க வீரர்களாக களம் இறங்கிய சர்க்கார், தமீம் இக்பால் நிதானமாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். தமீம் இக்பால் 16 ரன்களும், சவுமியா சர்க்கார் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

அதனையடுத்து ஜோடி சேர்ந்த சகிப்-அல்-ஹசன் & முஷ்பிகுர் ரஹிம் 142 ரன்கள் பார்ண்டர்ஷிப் கொடுத்தனர். இதன் மூலம் வங்கதேச அணியின் ரன் வேகமாக முன்னேறியது. அடுத்து வந்த முகமது மிதுன் 21, முகமதுல்லா 46, ஹொசைன் 26 ரன்கள் என அடித்து இறுதியில் வங்கதேச அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 330 ரன்கள் குவித்தனர்.

331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்கள். டி காக் 23 ரன்களில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மார்க்ரம் 46 ரன்களும், கேப்டன் டூபிளேஸிஸ் 62 ரன்களும், டேவிட் மில்லர் 38 ரன்களும், வான்டர்சன் 41 ரன்களும், டுமினி 45 ரன்களும் எடுத்து அவுட்  ஆகி வெளியேறினர். 

இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்கா அணியை வங்கதேசம் வீழ்த்துவது இரண்டாவது முறையாகும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bangaladesh #World cup 2019
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story