ஷிகர் தவானை தூக்கிவிட்டு அதிரடியாக சேர்க்கப்பட்ட புதிய வீரர்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
new player replaced for sikar dhwan
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் இடது முழங்காலில் காயம் காரணமாக ஷிகர் தவான் விலகியதால் சஞ்சு சாம்சன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் அதிரடி மட்டையாளரான ஷிகர் தவான் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனாலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரவிசாஸ்திரியின் ஆதரவுடன் இந்திய அணியில் இடம்பிடித்து வருகிறார்.
இந்நிலையில், டி20 தொடரின் போது ஷிகர் தவானின் இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகர் தவான் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில்இருந்து விலகியுள்ளார்.
எனவே ஏற்கனவே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சித்ததால், தற்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவரை மாற்று வீரராக தேர்வு செய்வதற்கு பதிலாக அவரது திறமைக்கு மதிப்பளியுங்கள் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.