×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏம்மா? என்னம்மா இதெல்லாம்? ஒட்டுமொத்த பேரையும் திரும்பி பார்க்கவைத்த வீராங்கனை! வைரல் வீடியோ

மகளிருக்கான டி20சேலஞ்ச் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணியின் வீராங்கனை நட்டகன் சந்தம் மிகவும் அபாரமாக பந்தை தடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

மகளிருக்கான டி20சேலஞ்ச் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணியின் வீராங்கனை நட்டகன் சந்தம் மிகவும் அபாரமாக பந்தை தடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

மகளிருக்கான ஐபில் போட்டியாக கருதப்படும் டி20சேலஞ்ச் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சூப்பர் நோவாஸ் மற்றும் ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ம்ரித்தி மந்தானா மற்றும் டாட்டின் ஜோடி இருவரும் மிகவும் அபாரமாக ஆடி வலுவான அடித்தளத்தை அமைத்தனர்.

இறுதியில் ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணியின் வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 102 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

இதுஒருபுரம் இருக்க, ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணி வீராங்கனைகள் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது எதிரணி வீராங்கனை அடித்த பந்தை ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணியின் வீராங்கனை நட்டகன் சந்தம் பாய்ந்து பிடித்த ஒரு பீல்டிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நூலிழையில் பவுண்டரியை தொட இருந்த பந்தை நட்டகன் சந்தம் பாய்ந்து சென்று பவுண்டரிக்கு செல்லாமல் தடுத்துள்ளார். நட்டகன் சந்தம் அபாரமாக பந்தை தடுத்ததை பார்த்து எதிரணி வீராங்கனைகள் கூட கைதட்டி பாராட்டினர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cricket news #Viral catch videos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story