×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரொம்ப எதிர்பார்ப்புடன் இருந்தேன்.. ஆனால் இப்படி ஆகிடுச்சு.! ரொம்ப கஷ்டமா இருக்கு.! நடராஜன் வெளியிட்ட உருக்கமான வீடியோ.!

தமிழக வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐ

Advertisement

தமிழக வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். நடராஜனுக்கு முழுங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021 ஐபிஎல் தொடரிலிருந்து தமிழக வீரர் நடராஜன் விலகுவதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், தமிழக வீரர் நடராஜன் 2021 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதை சன்ரைசர்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பக்கத்தில் அறிவித்துள்ளது. அந்த பதிவில் நடராஜன் பேசும் வீடியோ ஒன்றையையும் இணைத்துள்ளார். அதில் பேசிய நடராஜன், இந்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக நான் விலகுகிறேன். இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

கடந்த வருடம் சிறப்பாக விளையாடியிருந்தேன், அதே போல் இந்த வருடமும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தேன். துரதிஷ்டவசமாக எனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் டீமை இந்த வருடம் பிரிவதால் வருந்துகிறேன். என்ன செல்வதென்று தெரியவில்லை ஒரு மாதிரி கஷ்டமாக இருக்கிறது. இனிவரும் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#natarajan #cricket
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story