×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு.! விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி.! அணியின் மொத்த விவரம்.!

விஜய் ஹசாரே ஒருநாள் போட்டிக்கான தமிழக அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம்பிடித்துள்ளார்.

Advertisement

சேலம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி இந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். நடராஜன் கடந்த ஐ.பி.எல் சீசினில் பல விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து நடராஜன் ஐபிஎல்லுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இந்திய அணி வெற்றி பெற பெரும்பங்கு வகித்தார். 

இதனையடுத்து டெஸ்ட் தொடரிலும் பிரமாதப்படுத்தி ஒரே தொடரில் அனைத்து வடிவங்களிலும் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெயரையும் எடுத்தார். இதனையடுத்து நடராஜனுக்கு இந்திய அளவில் ஏரளமான ரசிகர்கள் பெருகினர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடராஜனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம்பிடித்துள்ளார். இந்தப் போட்டி இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழக அணி: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), அபராஜித் (துணை கேப்டன்), இந்திரஜித், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், ஷாருக் கான், ஜெகதீசன், சூர்யபிரகாஷ், கெளசிக் காந்தி, ஜே. கெளசிக், எம். அஸ்வின், சாய் கிஷோர், எம். சித்தார்த், சோனு யாதவ், கே. விக்னேஷ், டி. நடராஜன், அஸ்வின் கிறைஸ்ட், பிரதோஷ் ரஞ்சன் பால், பெரியசாமி, எம். முகமது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#natarajan #vijay hazare
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story