×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மும்பை அணிக்கு கிடைத்த மிகப்பெரிய லக்கி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

mumbai indians lucky

Advertisement


ஐபில் போட்டியின் 12 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவருகிறார். இந்தநிலையில், இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, ஐ.பி.எல் தொடரில் இருந்து பாதியில் வெளியேறினார்.

இதனால் ஹைதராபாத் அணியுடன் நடைபெற்ற போட்டியில், மலிங்காவுக்கு பதிலாக அல்ஜாரி ஜோசப் அறிமுக வீரராக களமிறங்கினார். அந்தப் போட்டியில் அவர் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்தநிலையில் 24வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் எதிர்கொண்டது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. நேற்றைய ஆட்டத்தில் இதுவரை மும்பை அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மா ஆடவில்லை. அவருக்கு பதிலாக சித்தேஷ் களமிறங்கினார்.

 நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி 1 பந்துகளுக்கு 2 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது. அப்போது மும்பை அணியின் அல்ஜரி ஜோசப் 2 ரன்களை தட்டிவிட்டு மும்பை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் எந்த வீரர்கள் போனாலும் புதிதாக வரும் அறிமுக வீரர்கள் அசத்தி வருகின்றனர்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 #Mumbai indians
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story