×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது! என்ன காரணம்?

mendis arrested for accident case

Advertisement

இலங்கை பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ் காரில் சென்ற போது கொழும்பு புறநகர் பகுதியான பனாதுராவில் நடந்து சென்று கொண்டிருந்த 64 வயது முதியவர் மீது காரை மோதியதில் அவர் பரிதாபமாக பலியானார்.

இதனால் குசால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணைகள் முடிந்ததும் குசால் மெண்டிஸ் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.  சாலை விபத்தில் இவர் கைது செய்யப்பட்டிருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ். 25 வயதாகும் இவர் இலங்கை அணிக்காக 44 டெஸ்ட் மற்றும் 76 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kushal mendis #arrested #accident
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story