தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உலகக்கோப்பையில் இந்த சாதனை நிச்சயம் அரங்கேறும்! அடித்துக் கூறும் ஜாம்பாவான்

Mark waugh tells about new record in wc2019

Mark waugh tells about new record in wc2019 Advertisement

வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு இன்னிங்சில் 500 ரன்கள் அடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என மார்க் வாக் தெரிவித்துள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணி மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தான். ஆஸ்திரேலிய அணிக்கெதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அந்த அணி, 481 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

wc2019

இந்நிலையில் இந்த சாதனை வரும் உலககோப்பை தொடரில் முறியடிக்கப்பட்டு ஒரு இன்னிங்சில் 500 ரன்கள் எடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் மார்க் வாக் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அவர், "உலகக்கோப்பை தொடர் நடைபெறும் இங்கிலாந்து மைதானங்கள் தற்போது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. உதாரணமாக சமீபத்தில் நடந்த இங்கிலாந்து - பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 4 முறையும் பாகிஸ்தான் அணி 3 முறையும் 340 ரன்களுக்கு மேல் குவித்தன. 

இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 373 ரன்கள் அடித்தது. இதிலிருந்து இங்கிலாந்து மைதானங்களில் பேட்ஸ்மேன்கள் தாண்டவம் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சாளர்களின் நிலைமை சற்று கவலையாக தான் உள்ளது. 

எனவே இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு லோக்கல் அணியிடம் பலம் வாய்ந்த அணி அதிரடியாக ஆடி ஒரு இன்னிங்சில் 500 ரன்களை எளிதாக கடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன" என மார்க் வாக் கூறியுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#wc2019 #World cup 2019 #Mark waugh
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story