15 வருட கடின உழைப்பிற்கு முற்றுப்புள்ளி! உறுதியானது மலிங்காவின் கடைசி போட்டி
Malinga last odi confirmed

2004 ஆம் ஆண்டு முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்து வரும் லசித் மலிங்கா ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
35 வயதான மலிங்கா 2004ஆம் ஆண்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். யார்க்கர் மன்னன் என பெயர் பெற்ற மலிங்கா தனது வித்தியாசமான பௌலிங் ஆக்சனால் ரசிகர்கள் மனதில் விரைவில் இடம்பிடித்தார்.
30 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிய மலிங்கா 2011 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தினார். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடி வருகிறார்.
இதுவரை 225 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள மலிங்கா 335 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முரளிதரன், சமிந்தா வாசுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கை வீரர் இவர் தான்.
வரும் ஜூலை 26 ஆம் தேதி கொலும்பில் நடைபெறும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மலிங்கா. இதனை இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே உறுதி செய்துள்ளார்.