×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தம்பி ஹர்திக் பாண்டியா விக்கெட்டை வீழ்த்தி அண்ணன் குர்னல் பாண்டியா கொடுத்த ரியாக்சனை பார்த்தீங்களா..! வைரலாகும் வீடியோ

தம்பி ஹர்திக் பாண்டியா விக்கெட்டை வீழ்த்தி அண்ணன் குர்னல் பாண்டியா கொடுத்த ரியாக்சனை பார்த்தீங்களா..! வைரலாகும் வீடியோ

Advertisement

15-வது ஐ.பி.எல். தொடரின் 4ஆவது லீக் ஆட்டத்தில் புதிய அணிகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோஅணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லக்னோ அணியின் சார்பில் அதிகபட்சமாக சமீரா 2 விக்கெட்டுகளும், அவேஷ் கான், குர்ணால் பாண்ட்யா மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

நேற்றைய போட்டியின் போது குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒருகட்டத்தில் சிறப்பாக பேட்டிங் ஆடி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லக்னோ வீரரும் அவர் சகோதரருமான குர்னல் பாண்டியா பந்துவீசினார். ஹர்திக் பாண்டியா 33 ரன்கள் எடுத்திருந்த போது குர்னல் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தம்பியின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் அது குறித்து கொண்டாடாமல் குர்னல் அமைதி காத்து வாயில் கை வைத்து கொண்டார். தம்பியின் விக்கெட்டை அண்ணன் வீழ்த்திய சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Harthik pandya #kurnal pandya
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story