அதிர்ச்சி! முதல் முறையாக தோணி மீது புகார் கூறும் சகவீரர்! யார் தெரியுமா?
Kuldeep yathav complaints about ms dhoni

ஐபில் சீசன் 12 சில நாட்களுக்கு முன்பு முடிவு பெற்றதை அடுத்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. உலக கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை தொடரை சந்திக்கவுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம், கூல் கேப்டன் தோணி மீது இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அடுக்கடுக்காக புகார் கூறியிருப்பது அனைவரும் ஆச்சரியத்தில் ஆழத்தியுள்ளது.
இதுபற்றி கூறிய அவர் சியட் கிரிக்கெட் விருது நிகழ்ச்சியில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தோனி ஆட்டத்தின் போது அதிகமாக பேச மாட்டார். பந்து வீசும் போது ஓவர்களின் நடுவே திடீரென வந்து சில யோசனைகளை சொல்வார். அவர் கருத்தில் அவர் எப்போதும் உறுதியாக இருப்பார். அதனை மற்றவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
பல நேரங்களில் அவரது முடிவு தவறாகவும் இருந்துள்ளது. னை அவரிடத்தில் சொல்ல முடியாது எனவும் கூறி பகீர் கிளப்பியுள்ளார் குல்தீப் யாதவ்.