ஆஹா.. என்ன ஒரு அற்புதமான ரன் அவுட்..! RCB ஏலத்துல எடுத்த வீரரா இது..! வைரலாகும் வேற லெவல் வீடியோ.
பெங்களூரு அணி ஏலம் எடுத்துள்ள கேரளாவை சேர்ந்த இளம் வீரர் ஒருவர் அசத்தலான ஸ்டம்பிங் செய்த வ
பெங்களூரு அணி ஏலம் எடுத்துள்ள கேரளாவை சேர்ந்த இளம் வீரர் ஒருவர் அசத்தலான ஸ்டம்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டிற்கான ஐபில் T20 போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க இருக்கும்நிலையில், வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வானது கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பெரும்பாலான அணிகள் தங்கள் அணியில் இருந்த சில வீரர்களை விடுவித்து புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
அந்த வகையில் பெங்களூரு அணி, கேரளாவை சேர்ந்த இளம் வீரர் முகமது அசாருதீனை அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் பெங்களூரு அணியில் தேர்வாகியுள்ள இளம் வீரர் முகமது அசாருதீன் கேரளாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 போட்டியில் டைவ் அடித்து ஸ்டம்பிங் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கேரளாவில் KCA Eagles மற்றும் KCA Tuskers என்ற அணிகளுக்கு இடையே நடந்த T20 போட்டியில், KCA Eagles அணி சார்பாக விளையாடிவரும் முகமது அசாருதீன், எதிரணி வீரர் ஸ்ரீநாத்தை மிக அற்புதமாக ரன் அவுட் செய்தார்.
பந்தை அருகில் அடித்துவிட்டு சிங்கில் எடுக்க ஓடிய ஸ்ரீநாத், பந்து பீல்டரில் கையில் சிக்கியதால், மீண்டும் கிரீசை நோக்கி ஓடி வந்தார். அப்போது பீல்டர் பந்தை எடுத்து கீப்பர் முகத்து அசாருதீனிடம் வீச, அவர் டைவ் அடித்து ரன் அவுட் செய்தார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
மேலும் அந்த போட்டியில் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடிய முகமது அசாருதீன் 43 பந்துகளில் 69 ரன்கள் அடித்து பேட்டிங்கிலும் அசத்தியுள்ளார். இதனால் பெங்களூரு அணிக்கு மேலும் ஒரு சிறப்பான இளம் வீரர் கிடைத்துள்ளதாக அந்த அணி ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.