×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன கொடுமை! உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஜாம்பாவான்களுக்கு உலகக்கோப்பை தொடரில் நடந்த பரிதாபம்

jayasurya watched india srilanka match in stands

Advertisement

1996 ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற்ற ஆறாவது உலக கோப்பை தொடரில் இலங்கை அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகனாக அரவிந்த டீ சில்வா தேர்வு செய்யப்பட்டார்; தொடர் நாயகனாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் சனத் ஜெயசூரியா தேர்வானார்.

இலங்கை அணிக்காக சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வெற்றிகளை தேடித் தந்தவர்கள் ஜெய்சூர்யா மற்றும் அரவிந்த டீ சில்வா. இலங்கை அணியின் ஆட்டக்காரர் ஜெயசூரியாவை கண்டு அஞ்சாத பந்துவீச்சாளர்களே இருந்திருக்க முடியாது. ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே அதிரடியாக ஆடும் வல்லமை கொண்டவர் சனத் ஜெயசூர்யா. 1989 ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக ஆடிய ஜெயசூரியா 445 ஒருநாள் போட்டிகளில் ஆடி 13430 ரங்களும் 323 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஜெயசூர்யா இலங்கை அணிக்காக 6 உலகக் கோப்பை தொடர்களில் ஆடியுள்ளார்.

இத்தகைய சிறப்பு மிக்க சனத் ஜெயசூர்யா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே இலங்கையில் அரசியலில் ஈடுபடத் துவங்கினார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக 2010ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 2019-ம் ஆண்டு ஊழல் வழக்கில் சிக்கிய ஜயசூரியவிற்கு 2 ஆண்டுகள் ஐசிசி கிரிக்கெட் நிகழ்வுகளில் பங்கு பெற தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ஜெயசூர்யாவுக்கு எந்தவித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை. குறிப்பாக ஆட்டத்தை பார்க்க வந்த அவருக்கு எந்த சிறப்பும் மரியாதையும் கூட வழங்கப்படவில்லை. இன்று நடைபெற்ற இந்தியா-இலங்கை லீக் போட்டியை காண ஜெயசூரியா மைதானத்திற்கு வருகைதந்திருந்தார். ரசிகர்களோடு ரசிகர்களாக இருக்கையில் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார். அவருடன் சக வீரர் அரவிந்த டீ சில்வா போட்டியை கண்டுகளித்தார்.

ஜெயசூர்யாவை போலவே அரவிந்த டீ சில்வாவும் இலங்கை அணிக்காக பலவிதங்களில் துணையாக இருந்துள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக ஆடியுள்ளார் அரவிந்த டீ சில்வா. 58 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 9274 ரன்களுக்கு 106 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#wc2019 #ind vs sl #sanath jayasuria #aravind di selva #jayasurya watching worldcup #1996 worldcup champions #Sri lanka
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story