ஜடேஜா வேற லெவல்..! காற்றில் பறந்து பிடித்த கேட்ச்சால் பிரமித்து போன ரசிகர்கள்! வீடியோ உள்ளே
Jadeja stunnung catch against Newzland

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 63 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இன்று துவங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஜடேஜா பிடித்த கேட்ச் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.
முகமது சமி வீசிய 72 ஆவது ஓவரின் கடைசி பந்தில் வாகனர் லெக் திசையில் வளைத்து அடித்த பந்தினை ஜடேஜா காற்றில் பறந்து ஒற்றை கையால் பந்தை பிடித்து வாக்னரை அவுட்டாக்கினார். மின்னல் வேகத்தில் வந்த பந்தினை ஜடேஜா அசால்டாக கேட்ச் பிடித்ததை கண்டு அனைவரும் பிரமித்தனர்.