×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐபில் அணிகளின் தற்போதைய புள்ளி பட்டியல் நிலவரம்! எந்த அணி எந்த இடம் தெரியுமா?

இந்த சீசனிற்கான ஐபில் போட்டிகளின் தற்போதைய புள்ளிவிவர பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் டெல்லி அணி முதல் இடத்திலும், சென்னை அணி கடைசி இடத்திலும் உள்ளது.

Advertisement

இந்த சீசனிற்கான ஐபில் போட்டிகளின் தற்போதைய புள்ளிவிவர பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் டெல்லி அணி முதல் இடத்திலும், சென்னை அணி கடைசி இடத்திலும் உள்ளது.

ஐபில் 13 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி போட்டிகள் தொடங்கிய நிலையில் இதுவரை 16 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணியும், சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளும் மோதுகின்றன.

இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின்படி, நான்கு போட்டிகளில் விளையாடி, 3 வெற்றி, 6 புள்ளிகளுடன் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

அதேபோல் 4 போட்டிகளில் விளையாடி, 3 வெற்றி, 6 புள்ளிகளுடன் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி இரடாவது இடத்திலும், இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி என மொத்தம் 4 புள்ளிகளுடன் மும்பை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஹைதராபாத் அணி தொடர் வெற்றிகளால் 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

மேலும் ஆளுக்கு 4 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி 5 வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 6 வது இடத்திலும் உள்ளது. நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள பஞ்சாப் மற்றும் சென்னை அணி தலா இரண்டு புள்ளிகளுடன் ஏழு மற்றும் 8 வது இடத்தில் உள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL Points Table #csk #IPL T20 Points Table #ipl t20 2020 points table #latest ipl news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story