ஐபிஎல் 2019 போட்டிக்கான அட்டவணை வெளியீடு! முதல் போட்டி யார் யாருக்கு தெரியுமா?
IPL T20 2019 match details and venue details

ஒவொரு வருடமும் IPL T20 போட்டிகள் சிறப்பாக நடிப்பெற்று வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் இந்த IPL T20 போட்டி இந்த வருடமும் சிறப்பாக நடைபெற உள்ளது. கடந்த சில வருடங்களாக சூதாட்ட புகாரில் இருந்து மீண்டு கடந்த வருடம் மீண்டும் IPL போட்டியில் இடம் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இந்நிலையில் இந்த வருடம் நடைபெறும் போட்டியானது மார்ச் 23-ந்தேதி தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோத இருக்கின்றன.
இதற்கு முன்னதாக மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடப்படும். போட்டிகள் அனைத்தும் இந்தியாவில்தான் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்சமயம் முதல் இரண்டு வாரத்திற்கான போட்டிக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முதல் போட்டி சென்னையில் வரும் மார்ச் 23 ஆம் தேதி தொடங்குகிறது.