அதிருப்தியில் ரசிகர்கள்.... டிரெஸ்ஸிங் ரூமில் வேப் அடித்த கேப்டன் ரியான் பராக்! லைவ் டிவியில் தெளிவாக தெரிந்த அதிர்ச்சி காட்சி. சர்ச்சையை கிளப்பிய வீடியோ!!!
ஐபிஎல் 2026 போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக், டிரெஸ்ஸிங் ரூமில் வேப் பயன்படுத்திய காட்சி சர்ச்சையை கிளப்பியது.
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முக்கிய வெற்றியைப் பதிவு செய்தாலும், அதன் கேப்டன் ரியான் பராக் செய்த ஒரு செயல் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 40-வது லீக் போட்டியில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. நேரடி ஒளிபரப்பில் தற்செயலாக பதிவான அந்த காட்சி ரசிகர்களிடையே அதிருப்தியை கிளப்பியுள்ளது.
டிரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?
போட்டியில் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த பின்னர் ஆட்டமிழந்த பராக், சில நிமிடங்களில் டிரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்றார். அங்கு அமர்ந்தவுடன் அவர் Vape சாதனத்தை பயன்படுத்திய காட்சி தெளிவாக ஒளிபரப்பில் தெரிந்தது. அவருக்கு அருகில் துருவ் ஜூரல், குல்தீப் சென், யுத்வீர் சிங் சரக் உள்ளிட்ட வீரர்கள் இருந்தபோதும், எந்த தயக்கமும் இல்லாமல் அவர் அதைப் பயன்படுத்தியது கவனிக்கத்தக்கதாக இருந்தது.
ரசிகர்கள் எதிர்ப்பு, சமூக வலைதளங்களில் பரபரப்பு
இந்த காட்சி வெளியானவுடன், சமூக வலைதளங்களில் அது வேகமாக பரவியது. குறிப்பாக எக்ஸ் தளத்தில் வீடியோவும் புகைப்படங்களும் பகிரப்பட்டு, ரசிகர்கள் கடும் விமர்சனம் பதிவு செய்து வருகின்றனர். ஒரு அணியின் கேப்டனாக இருக்கும் நிலையில், இளம் வீரர்களுக்கு தவறான முன்னுதாரணமாக நடந்து கொண்டதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இப்படி ஒரு மனுஷனா.? பழைய வாஷிங் மெஷினில் உள்ளே கை வைக்க வைக்க கட்டுக்கட்டாக வந்த பண நோட்டுகள்! வைரலாகும் வீடியோ..!!!
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?
களத்தில் ஆக்ரோஷமான நடத்தை காரணமாக ஏற்கனவே விமர்சனங்களை சந்தித்துள்ள ரியான் பராக், இந்த புதிய சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இதையடுத்து, அணியினரும், லீக் நிர்வாகமும் இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. தேவையானால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிர்ச்சி... ஐபிஎல் மேட்ஜில் RR வீரர் அடித்த சிக்சரில் முதியவரின் முகத்தை தாக்கிய பந்து! இரத்தம் சொட்ட சொட்ட....பகீர் வீடியோ!!!